தூக்கு தண்டனையை எதிர்த்து தீக்குளித்து உயிர்நீத்த செங்கொடி நினைவு ரத்ததான முகாம்!

Senkodiதூக்கு தண்டனைக்கு எதிராக தீக்குளித்து உயிர்நீத்த செங்கொடி நினைவு ரத்ததான முகாம் சென்னையில் இன்று நடைபெற்றது.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை தூக்கிலிடக்கூடாது என வலியுறுத்தி தீக்குளித்து உயிர்நீத்த செங்கொடியின் நினைவு தினமான இன்று சென்னை பச்சையப்பா கல்லூரி அருகே சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது.

இந்த ரத்ததான முகாமினை செங்கொடி-முத்துகுமார் பாசறை ஏற்பாடு செய்திருந்தது. பேரறிவாளன் கல்வி பாசறையை சேர்ந்த பொன்னப்பன் தலைமை தாங்கினார். மேலும், பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தரராஜன் துவக்கி வைத்தார்.

10626525_701202366635277_723546988113655606_n

10620753_701202389968608_3032271180237023543_n

10429255_701202453301935_8434914719845005730_n

10603808_701202436635270_3429850597595335221_n

10590642_701202493301931_4840495527613798707_n

தூக்குதண்டனைக்கு எதிராக உயிர் தியாகம் செய்த தோழர் செங்கொடியை நினைவுகூறும் விதமாக ஒவ்வவொரு வருடமும் இந்த சிறப்பு ரத்ததான முகாம் நடத்தப்படும் என ரத்ததான முகாமினை ஏற்பாடு செய்த  செங்கொடி-முத்துகுமார் பாசறை தெரிவித்தது. இந்த ரத்ததான முகாமில் பலர் திரளாக கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top