உலகில் மோசமான மனிதர்கள் பட்டியலில் ராஜபக்சேவுக்கு 19-வது இடம்!

ராஜபக்சேவரலாற்று காலம் முதல் இதுவரை உலகில் இருக்கும் மிக மோசமான மனிதர்களில் இலங்கை அதிபர் ராஜபக்சே 19 வது இடத்தில் உள்ளார்.

பல்வேறு துறைகளில் இருக்கும் எந்த நபராக இருந்தாலும் மக்களின் விருப்பத்திற்கு அமைய’ உலகளாவிய ரீதியில் தரப்படுத்தலை மேற்கொள்ளும் ‘தி.ருன்கர்’ என்ற அமைப்பு, உலகில் மிக மோசமான மனிதர்கள் பட்டியலில் அதிபர் ராஜபக்சேவை தரப்படுத்தியுள்ளது.

உலக மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி வெளியிடப்பட்ட இந்த பட்டியலில், வரலாற்று காலம் முதல் இன்று வரை உலகில் உள்ள மோசமான மனிதர்கள் என்ற இந்த தரப்படுத்தலில், இனப்படுகொலையாளர்கள், சர்வாதிகாரிகள், திரிபுப்படுத்த தர்ம உபதேசங்களை செய்தவர்கள், விசர்தனமான அரசியல் வாதிகள் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

தமது சமதர்ம கொள்கைக்கு எதிராக செயற்பட்டார் என்ற காரணத்தினால் தனது சகாவான ட்ரொக்ஸ்கி என்பவரை பனி பாறைகளை உடைக்கும் கோடாரியால் வெட்டிக் கொலை செய்த மற்றும் தனது கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த பிராந்தியம் ஒன்றுக்கு உணவுப் பொருட்களை விநியோகிக்காது லட்சக்கணக்கானவர்களின் மரணத்திற்கு காரணமான சோவியத் ரஷ்யாவின் முன்னாள் சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலின் இந்த தரப்படுத்தலில் முதலிடத்தில் உள்ளார்.

ஜோசப் ஸ்டாலினின் செம்படையினரால் தோற்கடிக்கப்பட்ட லட்சக்கணக்கான யூதர்களை கொலை செய்த ஜெர்மனியின் முன்னாள் சர்வாதிகாரி   ஹிட்லர் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

இவர்களை தவிர போல்போட், இடி அமீன், மாவோ சேதுங், ஒசாமா பின்லேடன், கிம் ஜோன் ஹில், ஹென்ரிச் ஹிம்லர், சதாம் உசேன், போனிட்டோ முசோலினி ஆகியோர் வரிசைப்படுத்தல்படி முதல் பத்து இடங்களில் தரப்படுத்தப்பட்டுள்ளனர்.

பத்திரிகை ஆசிரியர்களை நடு வீதியில் பகிரங்கமாக கொலை செய்து, ஊடகவியலாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்களை வெள்ளை வேன் மூலம் கடத்தி காணாமல் போக செய்து, ஊடக நிறுவனங்களை தீயிட்டு கொளுத்தி, வெள்ளைக் கொடியுடன் வருமாறு கூறி அழைத்து பின்னர் அவர்களை கொலை செய்து, தனது ஆலோசகரை தமது நாடாளுமன்ற உறுப்பினரை கொண்டு நடு வீதியில் வைத்து சுட்டுக்கொலை செய்து, பெட்ரோல் மானியம் கேட்ட மீனவர்கள், ஓய்வூதியத்தை எடுக்க வேண்டாம் எனக் கூறிய தொழிலாளர்கள், குடிநீர் கேட்ட பாடசாலை மாணவர்களை சுட்டுக்கொலை செய்து, தமது பிரஜைகளின் தங்கத்தை கொள்ளையிட்டு, புதையல்களை தோண்டி, அருங்காட்சியத்தை உடைத்து பண்டைய கால வாளை திருடி, லட்சக்கணக்கான மக்களை கொலை செய்ய தேவையான வெடிப் பொருட்களை கொண்டு வந்த பயங்கரவாத தலைவர்களை அரவணைத்து, 2005 ஆம் ஆண்டு முதல் இலங்கையை அடக்கி ஆளும் மகிந்த ராஜபக்சே, இந்த பட்டியலில் 19 இடத்தில் இருப்பதாக இணைய  தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

எனினும் ஒன்னரை லட்சம் மக்களை கொன்று குவித்த அவர்தான் முதலாவது இடத்தில் இருக்க வேண்டும் என்பதே நல்லொழுக்கம் மிக்க மக்கள் கருத்தாக இருப்பதாகவும் அந்த இணைய தளம் கூறியுள்ளது.

தரப்படுத்தலில் உள்ள ஏனைய மோசமான மனிதர்கள் ஒரு கெட்ட வேலையை செய்திருந்தாலும் ராஜபக்சே, உலகில் உள்ள அனைத்து கெட்ட கெடுதிகளையும் செய்தும், செய்து கொண்டும் இருக்கும் நபர் எனவும் அந்த இணைய தளம் குறிப்பிட்டுள்ளது.

தி.ருன்கர் இணையதளத்தின் இணைப்பு: http://www.ranker.com/crowdranked-list/the-all-time-worst-people-in-history


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top