பிரதமர் மோடியை சந்தித்து பேசிய இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் குழு!

narendra-modiபிரதமர் நரேந்திர மோடியை இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்கள் இன்று சந்தித்து பேசினர்.

மத்தியில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்ற போது இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதன் பின்னர் இலங்கை தமிழர் பிரச்சனையில் இலங்கை அரசுக்கு ஆதரவான நிலையையே மத்திய அரசு கடைபிடித்து வருகிறது. இதனால் முந்தைய காங்கிரஸ் அரசு மேற்கொண்ட நிலைப்பாட்டைத்தான் ஈழப் பிரச்சனையில் பாஜக அரசும் கடைபிடிப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த நிலையில் ஈழத் தமிழர் தரப்பாகிய இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்கள் குழு நேற்று முன்தினம் டெல்லி வந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் 5 எம்.பிக்கள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவினர் நேற்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜையும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கையும் சந்தித்துப் பேசினர்.

பின்னர் இன்று பிரதமர் மோடியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்கள் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது இலங்கையில் தமிழர்கள் தாயகமான வடகிழக்கு பகுதியில் கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் மோடியிடம் வலியுறுத்தினர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top