டெஸ்ட் தோல்வியில் இருந்து இந்திய வீரர்கள் பாடம் கற்பார்கள்: ரவிசாஸ்திரி!

ad5ce073-8070-402c-b881-b720017c3717_S_secvpfஇங்கிலாந்தில் மோசமாக விளையாடிய இந்திய கிரிக்கெட் அணியில் அதிரடி மாற்றங்களை கிரிக்கெட் வாரியம் செய்தது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கு இந்திய அணியின் இயக்குனராக முன்னாள் வீரர் ரவிசாஸ்திரி நியமிக்கப்பட்டார். இதே போல பந்து வீச்சு மற்றும் பீல்டிங் பயிற்சியாளர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

உதவி பயிற்சியாளர்களாக சஞ்சய் பாஞ்சர், அருண்பாரத், ஸ்ரீதர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் டெஸ்ட் தோல்வியில் இருந்து வீரர்கள் பாடம் கற்பார்கள் என்று ரவிசாஸ்திரி தெரிவித்தார். அவர் கூறியதாவது:–

நேற்று கேப்டன் டோனி, பயிற்சியாளர் பிளட்சருடன் 2 மணி நேரம் பேசினேன். அப்போது அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விவாதிக்கப்பட்டது. டெஸ்ட் தொடரை இழந்ததற்கு அனுபவம்யின்மை தான் காரணம். இந்த தொடரில் லார்ட்சில் பெற்ற வெற்றி மிகவும் சிறப்பானது.

அதன்பின் ஏற்பட்ட தோல்விக்கு அனுபவம்யின்மை காரணமாகும். கடந்த 2 டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராட குணத்தை வெளிப்படுத்த வில்லை. போராடி தோற்று இருந்தால் மக்கள் ஏற்றுக் கொண்டு இருப்பார்கள். இருந்த போதிலும் டெஸ்ட் போட்டி தோல்வியில் இருந்து இந்திய வீரர்கள் பாடம் கற்று இருப்பார்கள்.

அடுத்து இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய வீரர்கள் சிறந்தவர்களாக திகழ்வார்கள். 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 40 நாட்களுக்குள் எதிர்க்கொள்ள உடல் தகுதி மற்றும் மனோதிடம் அவசியம்.

எனது கவலை எல்லாம் வீரர்கள் ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்தது தான். எல்லோரும் தவறு செய்வார்கள். ஆனால் அதை மாற்றி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top