தெலுங்கானா அரசின் உரிமையை பறிக்கவில்லை: ராஜ்நாத் சிங்

Rajnath_Singhஆந்திர மாநிலம் சீமாந்திரா மற்றும் தெலுங்கானா என இரண்டு மாநிலமாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாநிலங்களுக்கும் ஐதாராபாத் 10 ஆண்டுகள் பொது தலைநகரமாக இருக்கும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் ஐதராபாத் சட்டம் ஒழுங்கு விவகாரங்களில் கவர்னருக்கு அதிக அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறி, தெலுங்கானா அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. அரசின் அதிகாரங்களை பறிக்க முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டியது.

இதுதொடர்பாக தெலுங்கானா தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி எம்.பி.க்கள் டெல்லியில் இன்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்தனர். அப்போது அவர்களிடம், ‘‘நாங்கள் முதல் மந்திரியின் உரிமைகளை பறிக்கவில்லை. ஆந்திர மறுசீரமைப்பு சட்டத்தை மட்டுமே அமல்படுத்துகிறோம். அந்த சட்டத்தின்படி செல்கிறோம்.” என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

இந்த சந்திப்பு குறித்து தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி எம்.பி.யும், சந்திரசேகர ராவின் மகளுமான கவிதா கூறும்போது, ‘‘கவர்னர் அதிகாரம் குறித்து உள்துறை மந்திரியுடன் விவாதித்தோம். அவர் எங்கள் கருத்துகளை பொறுமையாக கேட்டறிந்தார். பின்னர், இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பை மத்திய அரசு காயப்படுத்தாது என்று உறுதியளித்தார்’’ என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top