முழங்கையில் ஏற்பட்ட காயத்தால் அமெரிக்க ஓபனில் இருந்து நடால் விலகல்!

nadalஇந்த ஆண்டின் கடைசி கிராண்ட்சிலாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் வருகிற 25–ந்தேதி தொடங்குகிறது.

நடப்பு சாம்பியனும், உலகின் இரண்டாம் நிலை வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்) இந்த போட்டியில் இருந்து விலகியுள்ளார். முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இதில் விளையாடவில்லை.

2012–ம் ஆண்டில் முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் நடால் விலகி இருந்தார். கிரான்ட்சிலாம் போட்டியில் காயத்தால் அவர் விலகுவது இது 7–வது முறையாகும். 2 முறை அமெரிக்க ஓபன் உள்பட 14 கிராண்ட்சிலம் பட்டங்களை நடால் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top