தாய்லாந்தில் பொதுத் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று தொடங்கியது.

யிங்லக் ஷினவத்ராதாய்லாந்து நாட்டில் பிரதமர் யிங்லக் ஷினாவத்ராவுக்கு எதிராக மாபெரும் போராட்டம் வெடித்ததை அடுத்து கடும் பதற்றத்திற்கு இடையே பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.

பாங்காங்கில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா (Yingluck Shinawatra) தந்து வாக்கினை அளித்தார்.இத்தேர்தலை பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி புறக்கணித்து விட்டது. மேலும் அரசுக்கு எதிராக போராட்டக் குழுவினர் வாக்குச்சாவடிகளுக்கு செல்லும் சாலைகளில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் எனக் கூறியுள்ளனர்.

எனவே ஓட்டுப்பதிவின் போது வன்முறை வெடிக்கும் அபாயம் நிலவுவதால் பிரதமர் யிங்லக் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அங்கு பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் அமைதியான முறையில் ஓட்டு பதிவு தொடங்கியுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top