ஏர்செல்-மேக்ஸிஸ் ஒப்பந்த விவகாரம்: நிதியமைச்ச அதிகாரிகளிடம் விசாரணை நடத்த திட்டம்

cbi officeஏர்செல்-மேக்ஸிஸ் வழக்கு தொடர்பாக மத்திய நிதியமைச்சக உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டுள்ளது.

மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக தயாநிதிமாறன் பதவி வகித்தபோது, ஏர்செல்லின் பங்குகளை மலேசியாவின் மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்க கட்டாயப்படுத்தினார் என்பது புகாராகும்.

இது தொடர்பாக விசாரித்துவரும் சிபிஐ, இவ்வார இறுதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளது. இதைத்தொடர்ந்து, ஏர்செல் – மேக்ஸிஸ் ஒப்பந்தத்திற்கு மத்திய நிதியமைச்சகத்தின் வெளிநாட்டு முதலீடு மேம்பாட்டு வாரியம் ஒப்புதல் வழங்கியது தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளது.

ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக கூறப்பட்ட நிலையில், அதனை ஏற்றுக்கொண்டது ஏன்? என நிதியமைச்சக அதிகாரிகளிடம் விசாரணை நடத்த இருப்பதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் விதிமீறல்கள் நடந்தது தெரியவந்தால், கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top