மதத்தால் மக்களை முட்டாளாக்க வேண்டாம்: ஆர்.எஸ்.எஸ்.சுக்கு திக் விஜய்சிங் கண்டனம்!

873de7e9-d204-4067-93db-16d7e038d824_S_secvpfமதத்தை பயன்படுத்தி அப்பாவி மக்களை முட்டாளாக்க வேண்டாம் என்று ஆர்.எஸ்.எஸ்.சுக்கு திக் விஜய்சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், இந்தியா ஒரு இந்து நாடு என்றும் ஹிந்துத்துவாதான் அதன் அடையாளம் என்று இரண்டாவது முறையாக பேசினார். மோகன் பகவத்தின் இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங், இதுபோன்று அரசியலில் மதத்தை பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ். மக்களை முட்டாளாக்க வேண்டாம். சனாதன் தர்மா மற்றும் சகிப்புத்தன்மை நமது பெருமையாகும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டம் தெரிவித்துள்ளார்.

மேலும், மத வேதங்களில் எங்காவது இந்து, இந்துத்துவா என்ற வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top