ஆந்திரா – தெலுங்கானா முதல்-மந்திரிகள் இன்று சந்திப்பு

c3dd684f-3972-4b46-9788-fa15f1c33c15_S_secvpfஆந்திரா– தெலுங்கானா மாநிலங்கள் இடையே பல்வேறு பிரச்சினைகள் இன்னும் தீர்வு காணப்படவில்லை.

இந்த பிரச்சினையால் இருமாநில முதல்–மந்திரிகள் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு உள்ளது. இருவரும் அறிக்கை போர் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் சுதந்திர தின விழாவையொட்டி கவர்னர் நரசிம்மன் அளித்த தேனீர் விடுதியில் ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவும், தெலுங்கானா முதல்–மந்திரி சந்திரசேகர ராவும் கலந்து கொண்டனர். 45 நிமிட நேரம் நடந்த இந்த விருந்தில் இருவரும் சமூகமாக பேசிக் கொள்ளவில்லை.

இருவரையும் மனம்விட்டு பேச வைக்க கவர்னர் நரசிம்மன் எடுத்துக் கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.

மாநிலம் பிரிந்து 2½ மாதங்களுக்கு மேல் ஆன போதிலும் முடிவு எட்டப்படாத பல பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்த இருமாநில முதல்– மந்திரிகளின் ஆலோசனை கூட்டத்துக்கு கவர்னர் நரசிம்மன் ஏற்பாடு செய்தார்.

கவர்னர் மாளிகையில் தர்பார் மண்டபத்தில் இன்று பிற்பகல் இந்த கூட்டம் நடக்கிறது,. இதில் சந்திர பாபுநாயுடு, சந்திரசேகரராவ் உள்பட இருமாநில தலைமைச் செயலாளர்கள், உயர் அதிகாரிகள், சபாநாயரகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இதில் அரசு ஊழியர்கள் ஒதுக்கீடு, மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, தலைமைச் செயலகம், சட்டமன்ற பிரிப்பு உள்ளிட்ட 30 அம்சங்களுக்கு தீர்வு ஏற்பட பேச்சுவார்த்தை நடக்கிறது.

தெலுங்கானாவில் 19–ந்தேதி நடத்தப்படும் தெலுங்கானா மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top