நஸ்ரியா, பகத்பாசில் திருமண நிச்சயதார்த்தம் அடுத்த மாதம் நடக்கிறது!

நஸ்ரியாநஸ்ரியாவுக்கும் பிரபல மலையாள டைரக்டர் பாசிலின் மகனும், நடிகருமான பகத் பாசிலுக்கும் காதல் மலர்ந்தது. மலையாள படமொன்றில் நடித்த போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு, காதல் வயப்பட்டார்கள். இதனை இரு வீட்டு பெற்றோரும் ஏற்றுக் கொண்டார்கள். திருமண ஏற்பாடுகள் தடபுடலாக துவங்கியுள்ளது. நஸ்ரியாவின் வீடு திருவனந்தபுரத்தில் உள்ளது. எனவே அங்கேயே திருமண நிச்சயதார்த்தத்தை நடத்துகின்றனர்.

இது குறித்து நஸ்ரியாவின் தந்தை கூறியதாவது:–

நஸ்ரியா–பகத் பாசிலின் திருமண நிச்சயதார்த்தத்தை அடுத்த மாதம் நடத்த முடிவு செய்துள்ளோம். இது முழுக்க குடும்ப நிகழ்ச்சி. நஸ்ரியா, பகத் பாசிலின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இதில் கலந்து கொள்கின்றனர். நிச்சயதார்த்தம் நடக்கும் இடம் தேதியை வெளிப்படையாக சொல்ல இயலாது. திருமணம் ஆகஸ்டில் நடக்கும் என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top