தண்டனை தளர்வு: பார்சிலோனா அணியினருடன் பயிற்சியில் இணைந்தார் சுவாரஸ்

luissuarez_3007359bபிரேசிலில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் தொடக்க சுற்றில் இத்தாலி அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது உருகுவே அணியின் முன்கள வீரர் சுவாரஸ், எதிரணியின் பின்கள வீரர் ஜியார்ஜியோ ஷிலினியின் தோள்பட்டையில் கடித்து விட்டார்.

பெரும் சர்ச்சையை கிளப்பிய இந்த கடி விவகாரம் குறித்து விசாரணை நடத்திய சர்வதேச கால்பந்து சங்க (பிபா) ஒழுங்கு நடவடிக்கை குழு உடனடியாக சுவாரஸ்சை சஸ்பெண்டு செய்ததுடன், 4 மாத காலம் கால்பந்து தொடர்பான எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவும் கடந்த ஜூலை 26-ந் தேதி தடை விதித்தது. பின்னர் சில நாட்களில் செய்த தவறுக்காக சுவாரஸ் வருத்தம் தெரிவித்தார்.

இதற்கிடையில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்க வேண்டும் என்று சுவாரஸ் தரப்பில் சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த விளையாட்டு தீர்ப்பாயம் சுவாரஸ்சுக்கு அளித்த தண்டனை காலத்தை குறைக்காவிட்டாலும், தண்டனையில் சில தளர்வுகளை அவருக்கு நேற்று முன்தினம் அளித்தது. கால்பந்து தொடர்பான எந்தவித நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளக்கூடாது என்ற நிபந்தனையையும், அணியினருடன் இணைந்து செயல்பட விதிக்கப்பட்ட தடையையும் விளையாட்டு தீர்ப்பாயம் தளர்த்தியது.

இதைத்தொடர்ந்து, லிவர்புல் கிளப்பில் (இங்கிலாந்து) இருந்து பார்சிலோனா (ஸ்பெயின்) கிளப்புக்கு சமீபத்தில் மாறியும் அணியினருடன் இணைந்து செயல்பட முடியாமல் தவித்த சுவாரஸ் நேற்று பார்சிலோனா கிளப் பயிற்சி முகாமில் இணைந்தார். காட்சி போட்டிகளில் சுவாரஸ் விளையாட முடியும். ஆனால் அங்கீகாரம் பெற்ற போட்டிகளில் அக்டோபர் 25-ந் தேதி வரை சுவாரஸ் விளையாட முடியாது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top