புலிப்பார்வை பட இசை வெளியீட்டு விழாவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு அடி உதை!

10612949_824847867533718_1736604764186770268_nஐ.ஜே.கே கட்சியின் தலைவர் பாரிவேந்தர் தயாரித்து, இயக்குனர் பிரவீன் காந்தி இயக்கியிருக்கும் படம் ‘புலிப்பார்வை’. படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் பாஜக தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணப்பாளர் சீமான், ஐ.ஜே.கே. கட்சியின் தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சமீபத்தில் இப்படத்தின் பிரத்தியோக காட்சி அரசியல் கட்சியினர், தமிழ் அமைப்பினர் மற்றும் மாணவ பிரதிநிதிகள் உள்ளிட்டோருக்கு திரையிட்டு காண்பிக்கபட்டது. இப்படத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் 13 வயது மகன் பாலச்சந்திரனை, ‘குழந்தைப் போராளி’யாக தவறாக சித்தரித்திருப்பதாகவும், தமிழீழ விடுதலை போராட்டத்தை கொச்சைபடுத்தியிருப்பதாகவும் தமிழ் அமைப்பினர் மற்றும் மாணவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும், இப்படத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் மாணவ அமைப்பினர் தெரிவித்திருந்தனர். இப்படம் தமிழர்களுக்கு எதிரானது எனக்கூறி பழ.நெடுமாறன், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள மறுத்துவிட்டனர்.

10577161_277859172420224_2998541130498755716_n

10544400_277859169086891_136005986112812227_n

இந்நிலையில், இன்று புலிப்பார்வை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற சுமார் 40 க்கும் மேற்பட்ட மாணவர்கள், இப்படத்தில் சிறுவன் பாலச்சந்திரன் போராளிகள் சீருடையில் ஏன் காட்டப்படுகிறான் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். உடனே அரங்கத்தில் இருந்து மாணவர்களை வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளனர். வெளியே வந்த மாணவர்களை ஐ.ஜே.கே, நாம் தமிழர் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சியினர் கம்பி, குழாய் முதலிய ஆயுதங்களை கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் மாணவர்கள் சிலர் படுகாயமடைந்துள்ளனர்.

10460780_277859185753556_3196120978291518710_n

காயமடைந்த மாணவர்களுக்கு எந்தவித முதலுதவியும் அளிக்கப்படாத நிலையில், அவர்களை போலீசார் ஜாம் பஜாரில் உள்ள சமுதாய நலக்கூடம் ஒன்றில் அடைத்து வைத்துள்ளனர். இந்நிலையில், மாணவர்களை தாக்கியோரை கைது செய்யாத காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை மட்டும் கைது செய்திருப்பதை கண்டித்து சமுதாய நலக்கூடத்திற்கு வெளியே முப்பதிற்கும் மேற்பட்டோர் கோஷங்களை எழுப்பிய வண்ணம் உள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top