துணை சபாநாயகர் பதவிக்கு அ.தி.மு.க.வின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல் செய்கிறார்

201408121146393786_Government-to-Nominate-M-Thambidurai-for-Lok-Sabha-Deputy_SECVPFபாராளுமன்ற துணை சபாநாயகர் பதவிக்கு அ.தி.மு.க.வின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு பதவி ஏற்ற பிறகு, 16வது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் சுமித்ரா மகாஜன் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார். மக்களவையில் நாளை துணை சபாநாயகர் தேர்வு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இந்த பதவி, பாராளுமன்ற அ.தி.மு.க. குழு தலைவர் தம்பிதுரைக்கு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் பாராளுமன்ற துணை சபாநாயகர் பதவிக்கு அ.தி.மு.க.வின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல் செய்கிறார் என தகவல்கள் தெரிவித்துள்ளன. அத்வானி, ராஜ்நாத் சிங் மற்றும் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் முன்மொழிய உள்ளனர். மக்களவை துணை சபாநாயகராக தம்பிதுரையை ஒருமனதாக தேர்வு செய்ய மத்திய அரசு தீவிரமாக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் உதவியை பெறவும் வெங்கையா நாயுடு முயற்சி செய்து வருகிறார். தம்பிதுரை ஏற்கனவே கடந்த 1985ம் ஆண்டு முதல் 1989ம் ஆண்டுவரை துணை சபாநாயகராக இருந்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top