நீர் பிடிப்பு பகுதியில் மழை: பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

85572bb4-cc0e-4888-83ac-ddc06015ce49_S_secvpfகடந்த சில தினங்களாக மாலை, இரவு நேரங்களில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மழை பெய்து வருகிறது.

நேற்று இரவு பூண்டி நீர் பிடிப்பு பகுதிகளில் 34.6 மில்லி மீட்டர் மழை பெய்தது. புழல் நீர் பிடிப்பு பகுதியில் 25 மி.மீ, செம்பரம்பாக்கம் பகுதியில் 19 மி.மீ மழை பெய்தது.

மழை காரணமாக பூண்டி ஏரிக்கு 532 கன அடி தண்ணீர் வருகிறது. கிருஷ்ணா கால்வாயின் மூலம் பூண்டி ஏரிக்கு 332 கன அடி தண்ணீர் வருகிறது. இன்று காலை நிலவரப்படி பூண்டி ஏரிக்கு மொத்தம் 864 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. புழல் ஏரிக்கு 35 கன அடி தண்ணீர் வருகிறது.

இன்றைய நிலவரப்படி புழல் ஏரியில் 779 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. பூண்டி ஏரியில் 265 மில்லியன் கன அடியும், செம்பரம்பாக்கத்தில் 774 மில்லியன் கன அடியும் தண்ணீர் இருப்பு உள்ளது.

வீராணம் ஏரியில் 347 மில்லியன் கன அடி தண்ணீர் இருக்கிறது. மேட்டூர் அணை திறக்கப்பட்டு விட்டதால் வீராணம் ஏரிக்கு விரைவில் தண்ணீர் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் மொத்தம் 2185 மில்லியன் கன அடி தண்ணீர் இருக்கிறது. கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மழை நீரும் வரத்தொடங்கி உள்ளது.

எனவே சென்னைக்கு தடையில்லாமல் குடிநீர் சப்ளை வழங்கப்படுகிறது. தற்போது தினமும் 587 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. ஏரிகளில் ஒரளவு தண்ணீர் இருப்பு உள்ளது. எனவே சென்னை நகருக்கு தண்ணீர் தட்டுப்பாடு வராது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top