தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!

tn-secretariatதமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

கடந்த மாதம் 10 ஆம் தேதி தொடங்கிய தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. கடைசி நாளான இன்று, நடப்புக் கூட்டத்தொடரில் இதுவரை அறிமுகம் செய்யப்பட்ட 10க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட உள்ளன.

முன்னதாக கேள்வி நேரம் முடிந்த பிறகு, பொதுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவாதங்களுக்கு, அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளிப்பதுடன், புதிய அறிப்புகளையும் வெளியிட உள்ளார்.

இந்த கூட்டத் தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சர் ஜெயலலிதா, பேரவை விதி 110ன் கீழ், 35க்கும் மேற்பட்ட புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைவதை ஒட்டி, ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அனைவருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று மாலை தேனீர் விருந்து அளிக்க உள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top