மீனவர்களை விடுவிக்கக்கோரிக்கை: 19-வது நாளாக ராமநாதபுரம் மீனவர்கள் போராட்டம்!

fishermenஇலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமநாதபுரம் மீனவர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தம் 19-வது நாளாக நீடிக்கிறது.

இதனால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர். கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, நாளை மேற்கொள்ளவிருந்த உண்ணாவிரதத்தை திரும்பப்பெறுவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர். வரும் 16ஆம் தேதி மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதால் உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top