ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: பிரான்ஸ் வீரர் ஸோன்கா சாம்பியன்!

Tsonga1ரோஜர்ஸ் கோப்பை ஆடவர் மாஸ்டர் டென்னிஸ் போட்டியில் பிரான்ஸ் வீரர் ஜோ வில்ஃப்ரெட் ஸோன்கா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

பட்டத்தை வெல்வதற்கான இறுதி ஆட்டத்தில் சர்வதேச தரநிலையில் 15-வது இடத்தில் உள்ள ஸோன்கா, முன்னாள் சாம்பியனும் தரநிலையில் 3-வது இடத்தில் உள்ளவருமான் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரை எதிர்கொண்டார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போட்டியில் முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் போராடி கைப்பற்றினார் ஸோன்கா. இரண்டாவது செட்டிலும் இருவருக்கும் இடையிலான போராட்டம் தொடர்ந்ததால், அந்த செட் ஆட்டம் டைபிரேக்கர் வரை சென்றது. இறுதியில் 7-6 என்ற கணக்கில் அந்த செட்டையும் கைப்பற்றி, வெற்றியை வசமாக்கினார் ஸோன்கா.

இதன் மூலம் 11-வது சர்வதேச பட்டத்தை கைப்பற்றிய அவர், மாஸ்டர் போட்டியில் தனது இரண்டாவது பட்டத்தையும் வென்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top