பல்வேறு கோரிக்கைகளை தமிழகம் முழுவதும் அங்கன்வாடிப் பணியாளர்கள் போராட்டம்

 அங்கன்வாடிப் பணியாளர்கள்பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அங்கன்வாடிப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரகம் அருகில் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கான்வாடி சங்கங்களின் கூட்டமைப்பைச் சார்ந்த  120 பெண்கள் உள்பட 220 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கோரிக்கைகள்:

அங்கன்வாடி குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவினை மேலும் தரமானதாக வழங்கும் வகையில் உணவுத் தயாரிப்பு மானியத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவரும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாக அறிவித்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

குடும்பப் பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.3500 – வழங்க வேண்டும். பணி ஓய்வுபெறும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு வழங்கும் ஒட்டு மொத்த உதவித் தொகை ரூ.50 ஆயிரத்தை ரூ.2 லட்சமாகவும் உதவியாளர் மற்றும் சமையலர்களுக்கு வழங்கும் ரூ.20 ஆயிரத்தை 1 லட்சமாகவும் உயர்த்த வேண்டும். மெஷின் மோடு என்கிற பெயரில்  அங்கன்வாடித் திட்டத்தை தனியார் மயமாக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும். இத்துறையிலுள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம்  நடைபெற்றது.

கூட்டமைப்பின் தலைவரும், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவருமான ச.காமராஜ் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற்ற   மாநில செயற்குழு உறுப்பினர் அ. மலர்விழி, சத்துணவுப்பணியாளர் சங்க மாவட்டத்தலைவர் அ. கணேசன், மாவட்டச்செயலர் சி. ரெங்கராஜு,  அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்க மாவட்ட அமைப்பாளர் எம். இந்திராணி, துணை அமைப்பாளர்கள் ஏ.எஸ். லெட்சுமி, எஸ். தேவமணி, சத்துணவு ஊழியர் சங்க  மாவட்டச் செயலர்  துரை.அரங்கசாமி மாநிலச் செயலர்  கு.சத்தி உள்பட 220 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதே போன்று தமிழகம் முழுவதும் மேலும் பல்வேறு இடங்களில் அங்கனவாடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top