அனுமதியின்றி ஆழ்குழாய் கிணறு தோண்டினால் 7 ஆண்டு சிறை!

15BOREWELL_0_0தமிழகத்தில் அனுமதியின்றி ஆழ்குழாய் கிணறு தோண்டினால் 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் சட்ட திருத்த மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஊராட்சிகள் சட்ட திருத்த முன் வடிவை தாக்கல் செய்தார்.

அதில், ஆழ்குழாய் கிணறுகள் தோண்டுபவர்கள், அந்த கிணறுகளின் உரிமையாளர்களின் அக்கறையற்ற தன்மையினால் சிறு குழந்தைகள் அதில் விழுந்து இறக்கின்றன. எனவே தோண்டப்படும் ஆழ்துளை கிணறு, ஆழ்குழாய் கிணறு, திறந்தவெளி கிணறு ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் பொருட்டு சட்டத்தை திருத்த அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி அனுமதியின்றி ஆழ்குழாய் கிணறுகளை தோண்டினால் அவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு குறையாத 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.

இந்த சட்ட திருத்தம் மாநகராட்சிகள் சட்டம், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் ஆகியவற்றிலும் திருத்தம் செய்யப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top