மாநிலங்களவையில் தெண்டுல்கரின் விடுமுறை விண்ணப்பம் ஏற்பு!

Sachin-Tendulkar-latest-hd-wallpapers-1600x981மாநிலங்களவை நியமன எம்.பி.யான சச்சின் டெண்டுல்கர், தொடர்ந்து நாடாளுமன்றத்திற்கு வராதது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் அனுப்பிய விடுப்பு விண்ணப்பம் ஏற்கப்பட்டதாக மாநிலங்களவை தலைவர் ஹமீத் அன்சாரி தெரிவித்துள்ளார்.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, கிரிக்கெட் விளையாட்டில் சச்சின் டெண்டுல்கர் ஆற்றிய சாதனைக்கு பரிசாக மாநிலங்களவை எம்.பி.யாக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் இந்த ஆண்டு இதுவரை சச்சின் டெண்டுல்கர், ஒருமுறை கூட நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இது அவருக்கு எதிராக கடும் விமர்சனங்களை கிளப்பியது.

இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய பல்வேறு கட்சி உறுப்பினர்களும், சச்சினின் இந்த நடத்தை குறித்து அதிருப்தி தெரிவித்தனர். அவைக்கு வராத சச்சின் மற்றும் நடிகை ரேகா ஆகிய இருவர் மீதும் நடவடிக்கை எடுத்து உறுப்பினர்கள் பதவியை காலியாக அறிவிக்க வேண்டும் வலியுறுத்தி இருந்தனர்.

இதனையடுத்து தன் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்த சச்சின் டெண்டுல்கர், ”என் மீதான விமர்சனங்கள் தேவையில்லாதது. நாடாளுமன்றத்தில் பங்கேற்காதது எனது தனிப்பட்ட விஷயம். இதற்காக என்னிடம் யாரும் கேள்வி கேட்க வேண்டியதில்லை.

மேலும், இதற்காக நான் யாரையும், எந்த அமைப்பினையும் குறைசொல்லவோ, அவமதிக்கவோ விரும்பவில்லை. எனது சகோதரருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவரின் மருத்துவ சிகிச்சை காரணமாக சென்று விட்டதால், நாடாளுமன்ற விவகாரங்களில் பங்கேற்க முடியவில்லை” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் அவைக்கு வர இயலாமல் போனது தொடர்பாக மாநிலங்களவை தலைவர் ஹமீத் அன்சாரிக்கு விடுப்பு விண்ணப்பம் ஒன்றை சச்சின் அனுப்பி இருந்தார். அதனை ஏற்றுக்கொண்டு அவருக்கு விடுப்பு வழங்கி உள்ளதாக ஹமீத் அன்சாரி தெரிவித்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top