தமிழகத்தில் இன்று மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!

rainபருவமழை தீவிரமடைந்துள்ளதால், தமிழகத்தின் பல இடங்களில் இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச் சலனம் காரணமாக சென்னையில் இன்று மாலை அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது.

குறிப்பாக நீலகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் அப்பகுதி மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதேபோல் தஞ்சை மாவட்டம், திருவையாற்றில் பெய்த மழையினால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேட்டூர் அணையிலும் நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், நீண்ட நாளைக்குப் பின் மழையும் பெய்துள்ளதாக அவர்கள் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top