மகளிர் ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி!

serena-williamsமகளிர் ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் அரையிறுதியில் முதல்நிலை வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

மோன்ட்ரெல் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், தனது சகோதரி வீனஸ் வில்லியம்சை எதிர்கொண்டார்.

டைபிரேக்கர் வரை சென்ற முதல் செட்டை செரீனா வில்லியம்ஸ் 7-6 என்ற கணக்கில் வசமாக்கினார். அதன் பின்னர் வீனஸ் வில்லியம்ஸின் கை ஓங்கியது. செரீனாவை தலையெடுக்க விடாமல் ஆடிய வீனஸ், அடுத்த இரண்டு செட்களை 6-2, 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி கண்டார்.

நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் மூன்றாம் நிலை வீராங்கனையான போலந்தின் ரட்வன்ஸ்காவை, வீனஸ் வில்லியம்ஸ் எதிர்கொள்கிறார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top