இந்தியாவுடன் சுமூகமற்ற உறவு: நவாஸ் ஷெரிப் வருத்தம்

09nawazஇந்தியாவுடனான சுமூகமற்ற உறவுக்காக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் வருத்தம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பிரதமர் நவாஸ் ஷெரில் தலைமையில் தேசிய பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில், ராணுவத் தளபதி, உளவுத்துறை தலைவர், அனைத்து மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நவாஸ் ஷெரிப், கடந்த காலத்தில் இந்தியாவுடனான நட்புறவு, சுமூகமற்ற நிலையில் இருந்ததற்காக அதிருப்தி வெளியிட்டார். இதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்வதாக கூறிய நவாஸ் ஷெரிப், பாகிஸ்தான் – இந்தியா இடையே நல்லுறவு ஏற்பட இதுவே சிறந்த தருணம் என சுட்டிக்காட்டினார்.

இரு நாடுகளின் வெளியுறவுச் செயலாளர்கள் இடையே நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை இருதரப்பு உறவு மேம்பட வழிவகுக்கும் என நம்புவதாகவும் நவாஸ் ஷெரிப் குறிப்பிட்டார்.

இந்தியா தவிர, ஆப்கானிஸ்தான் நாட்டுடனும் நல்லுறவைப் பேண விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top