ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ்: ஆண்டி முர்ரே தோல்வி!

aundy-murrayகனடாவில் நடைபெற்று வரும் ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர் ஆண்டி முர்ரே தோல்வியடைந்து வெளியேறினார்.

டொராண்டோவில் நடைபெற்று வரும் ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் காலிறுதி ஆட்டம் ஒன்றில் பிரிட்டனின் ஆண்டி முர்ரே, பிரான்சின் ஜோ வில்பிரைட் சோங்காவை எதிர்கொண்டார்.

முதல் செட் ஆட்டத்தில் முர்ரேவுக்கு கடும் நெருக்கடி அளித்த சோங்கா 7 – 6 என அந்த செட்டை வெற்றி கண்டார். அடுத்த செட்டில் சுதாரித்து விளையாடிய முர்ரே 6 – 4 என கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் அபாரமாக விளையாடிய சோங்கா 6 – 4 என கைப்பற்றினார்.

ரோஜர்ஸ் கோப்பை போட்டியில் இரண்டு முறை சாம்பியனான ஆண்டி முர்ரே காலிறுதி சுற்றுடன் வெளியேறினார். மற்றொர் காலிறுதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஸ்பெயின் டேவிட் ஃபெர்ரரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top