தெலங்கானா மசோதா நிறைவேறியே தீரும்: சுஷில் குமார் ஷிண்டே.

சுஷில்குமார் ஷிண்டேதெலங்கானா மசோதாவை ஆந்திர சட்டப்பேரவை நிராகரித்தாலும்,வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அது எந்த வித தடையுமின்றி நிறைவேற்றப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறுகையில், “”பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தெலங்கானா மசோதா நிச்சயம் நிறைவேற்றப்படும். அதற்கு எந்தத் தடங்கலும் இல்லை.

ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையிடமிருந்து மத்திய அரசு மறுசீரமைப்பு மசோதாவைப் பெறவில்லை. மத்திய அரசு தெலங்கானா குறித்து அட்டர்னி ஜெனரலின் கருத்துகளைக் கேட்கவில்லை” என்று கூறினார்.

இதற்கிடையே, தெலங்கானா விவகாரத்தில் பிரதான எதிர்க்கட்சியான பாஜகவின் ஆலோசனைகளை வரவேற்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்பால் ரெட்டி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு அமுல்படுத்திய தெலங்கானா மசோதாவை ஆந்திர சட்டப்பேரவை குரல் வாக்கெடுப்பு மூலம் கடந்த வியாழக்கிழமை நிராகரித்தது. இருப்பினும், மத்திய அரசு தனி தெலங்கானா மாநிலத்தை அமைப்பதற்கு இது எந்தவித தடையையும் ஏற்படுத்தாது என சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top