யுபிஎஸ்சி தேர்வு விவகாரம்: அனைத்து கட்சி கூட்டம் நடத்த மத்திய அரசு முடிவு!

parliament electionயுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு விவகாரம் குறித்து அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

மாநிலங்களவையில் கேள்வி நேரத்திற்குப் பிறகு பல்வேறு உறுப்பினர்களும் யுபிஎஸ்சி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது, தங்களது கருத்துகளை தெரிவிக்க நேரம் ஒதுக்கவில்லை என பல உறுப்பினர்கள் குற்றம்சாட்டியதால், அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து இடதுசாரிகள், சமாஜ்வாதி, திமுக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் யுபிஎஸ்சி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார். தேர்வு இந்த மாதமே நடைபெற உள்ளதால் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர், இந்த விவகாரத்துக்கு தீர்வு காண அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த அரசு முடிவெடுத்துள்ளதாகவும், யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு அறிவிக்கப்பட்டபடி வரும் 24ஆம் தேதி நடைபெற வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அரசின் பதிலை ஏற்க மறுத்து இடதுசாரிகள், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top