முதல்வர் பிறந்த நாளில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு ரூ. 10 ஆயிரம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு.

ஜெயலலிதாதமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு ரூ. 10 ஆயிரம் வழங்கப் படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. பிப். 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவின் 66-ஆவது பிறந்த நாள் வரும் பிப். 24-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு 66 வகையான முகாம்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என்று மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், முதல்வர் பிறந்த நாளில் பிறந்த மற்றும் பிறக்கும் பெண் குழந்தைகளின் பெயரில் வங்கியில் ரூ. 10 ஆயிரம் டெபாசிட் செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மாநகராட்சி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தியில் கடந்த 2012, 2013-ஆம் ஆண்டுகளில் பிப்ரவரி 24-ஆம் தேதி பிறந்த பெண் குழந்தைகளுக்கும், வரும் 24-ஆம் தேதி பிறக்கும் பெண் குழந்தைகளுக்கும், அவர்களுடைய பெயரில் ரூ. 10 ஆயிரம் டெபாசிட் செய்யப்படும். இந்தப் பரிசுத் தொகையை பெறுவதற்கு உரிய பிறப்புச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றுடன் பிப். 25-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் (குடும்பநலம்) துறைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top