கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை: 3-வது நாளாக மீட்புப் பணிகள் தீவிரம்

borewellகர்நாடக மாநிலம், பாகல்கோட் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஆறு வயது சிறுவனை மீட்க இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் என்று மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறுவன் சுவாசிப்பதற்காக தொடர்ந்து பிராணவாயு செலுத்தப்படுகிறது. என்றாலும், தற்போது எடுக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளில் சிறுவனின் உடல் அசைவுகள் எதுவும் பதிவாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆழ்துளை கிணற்றை ஒட்டியுள்ள இடத்தில் பொக்லைன் இயந்திரம் கொண்டு மண்ணைத் தோண்டும் பணி மூன்றாவது நாளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை, 90 அடி ஆழத்திற்கு மண் தோண்டப்பட்டிருக்கிறது. சிறுவன் 160 அடியில் சிக்கியிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதால், இன்னும் இரண்டு நாட்கள் மீட்புப் பணிகள் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவனின் நிலை குறித்து அறிய பயன்படுத்தப்பட்ட ரோபோவில் கோளாறு ஏற்பட்டதால், மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. சிறுவனை மீட்கும் பணியில் மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர், ஹட்டி தங்கச் சுரங்கத்தைச் சேர்ந்த சிறப்புக் குழுவினர், தீயணைப்புப் படையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

பாகல்கோட் மாவட்டம் சுளிகெரே கிராமத்தில், கடந்த ஞாயிற்றுக் கிழமை ஆழ்துளை கிணற்றில் திம்மண்ணா ஹட்டி என்ற ஆறு வயது சிறுவன் தவறி விழுந்தான். 240 அடி ஆழம் உள்ள அந்த கிணற்றில், சிறுவன் தம்மண்ணா 160 அடியில் சிக்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top