செவிலியர் பயிற்சி மாணவிகள் போராட்டம் வாபஸ்!

நர்ஸ்

தமிழக அரசின் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டு அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.

தனியார் கல்லூரிகளில் பயிலும் செவிலியரை அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்த எதிர்ப்பு தெரிவித்து, அரசு செவிலியர் பயிற்சிக் கல்லூரி மாணவிகள் மேற்கொள்ளும் போராட்டம் இன்று 5 வது நாளாக நடந்தது.

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மாணவிகள் இரவு முழுவதும் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட கீழ்ப்பாக்கம் மருத்துவமனை செவிலியர் கல்லூரி மாணவிகள் 300 பேரும், கஸ்தூரிபா தாய் சேய் நல மருத்துவமனை பயிற்சிப் பள்ளி செவிலியர் மாணவிகள் 200க்கும் மேற்பட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், அரசு செவிலியர் மாணவிகளுடன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செவிலியர் மாணவிகள், கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளதால் போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம் என்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top