லைகா மொபைலும் ராஜபக்சேவின் மருமகனும்! – ஹரிஹரன்

ராஜபக்சேவின் சாம்ராஜ்யம் இது தான்.. இதை விட அதிகமாக தமிழ் நாட்டில் நாம் பார்த்து இருந்தாலும் இதையும் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா அதற்காகவே உங்களின் பார்வைக்காக இந்த படம். இதில் கட்டம் கட்டப் பட்டிருக்கும் ஹிமல் லலீந்திர ஹிட்டிராச்சி தான் கட்டுரையின் கதாநாயகன்.

RPfamily tree

இவர் ராஜபக்சேவின் சகோதரி அதாவது ராஜபக்சேவின் அண்ணன் சமல் ராஜபக்சேவுக்கு அடுத்து பிறந்த சகோதரி ஜெயந்தி ராஜபக்சேவின் மகன் தான் ஹிமல் லலீந்திர ஹிட்டிராச்சி(பெயர் ரொம்ப நீளமாக இருக்கு இனிமேல் ஹிமல் என்றே அழைக்கலாம்) மஹிந்தாவின் அப்பா டான் ஆல்வின் ராஜபக்சேவிற்கு ஒன்பது குழந்தைகள் அதில் முதல் பையன் சமல் அதன் பிறகு ஜெயந்தி இவருக்கு பிறகு மகிந்தா அப்புறம் ஆறு குழந்தைகள் 5வது மற்றும் 6வது குழந்தைகள் தான் கோத்தபய மற்றும் பசில் ராஜபக்சே இது தான் இவர்களின் குடும்ப வரையறை, இதற்கு மேல் இதற்குள் சுற்றினால் நமது நேரம் வீணாகும்.

மஹிந்த ராஜபக்சேவின் சகோதரி ஜெயந்தி ராஜபக்சேவின் மகன் தான் ஹிமல் லலீந்திர ஹிட்டிராச்சி இவருக்கும் லைகாவிற்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி எழும். அதற்கான பதில் நேரடியானது இவர் தான் இன்று வரை இலங்கையில் இருக்கும் ஸ்கை டெல் மொபைல் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர்.

வலது ஓரத்தில் இருப்பவர் ஹிமல்

வலது ஓரத்தில் இருப்பவர் ஹிமல்

இவரைப் பற்றி முழுமையாக பார்க்கும் முன்பாக நாம் பார்க்க வேண்டியது ஸ்கை நிறுவனத்தின் கதை..

ஸ்கை நெட்வொர்க் என்று ஒரு நிறுவனம் மே 9ம் தேதி 2006ல் தொடங்கப்படுகிறது.  ஸ்ரீசேனா மற்றும் கே.எம்.எஸ் பண்டாரா என்ற இருவரால் 10ரூபாய் பங்குகள் இரண்டு ஆளுக்கு ஒன்று என்று 175/2 பழைய கொட்டவா ரோடு, மிரன்ஹா, நியுகேகொடா, எனும் விலாசத்தில் தொடங்கப்படுகிறது. இதன் பிறகு பொறியாளர் அஜந்தா கருணதாசா என்பவர் மே 24ம் தேதி 2006ல் இணைக்கப்படுகிறார். மார்ச் 2007ல் ஸ்ரீலங்கா தொலை தொடர்பு நிறுவனத்தாரால் எதிர்பார்க்கப்பட்ட கம்பியில்லா சேவை (WiMAX) ஒப்பந்தம் ஸ்கை நெட்வொர்க் பிரைவேட் லிமிட்டடுக்கு ஒதுக்கப்படுகிறது. மார்ச் 15ம் தேதி 2007 அன்று 9,50,000 பங்குகள் ஹாஸ்டிங்க்ஸ் ட்ரேடிங்க் ஈ சர்விஸஸ் என்ற போர்ட்சுக்கலை சேர்ந்த நிறுவனத்திற்கு விற்கப்படுகிறது.

இரண்டு வாரம் கழித்து மார்ச் 30ம் தேதி 2007 அன்று மூன்றாவதாக இணைக்கப்பட்ட பொறியாளர் அஜந்தா கருணதாசா தனது இயக்குனர் பதவியை ராஜினாமா செய்கிறார் அதே சமயத்தில் ஹிமல் லலீந்திர ஹிட்டிராச்சி இயக்குனர் பொறுப்பை ஏற்கிறார். இதற்கு முன்பு இயக்குனராக இருந்த அஜந்தா கருணதாசாவின் முகவரி ஏற்கெனவே நிறுவனம் ஆரம்பிக்க கொடுக்கப்பட்ட முகவரியான 175/2 பழைய கொட்டவா ரோடு, மிரன்ஹா, நியுகேகொடாவில் தான் குடியிருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது ஆவணங்களில். அதே போல் ஹிமல் லலீந்திர ஹிட்டிராச்சியின் ஆவணங்களும் இதே முகவரியையே  குறிப்பிடப் பட்டுள்ளது. இது மிகவும் முன்னதாகவே அதாவது ஒரு வருடத்திற்கு முன்னதாகவே அஜந்தாவை இயக்குனர் ஆக்கும் பொழுதே திட்டமிடப்பட்டது என்பது தெளிவாக தெரிகிறது.

ஹாஸ்டிங்க்ஸ் ட்ரேடிங்க் ஈ சர்விஸசுக்கு 9,50,000 பங்குகளை விற்ற பொழுதே அதாவது 95% பங்குகள் ஹாஸ்டிங்க்ஸ்க்கு விற்கப்பட்டது அதைப் போலவே மிச்சம் இருக்கும் 5% பங்கு ஹிமல் லலீந்திர ஹிட்டிராச்சிக்கு விற்கப்பட்டது அதன் கீழாகவே நிறுவன இயக்குனராக பதவி ஏற்கிறார். இப்படித் தான் ஹிமல் லலீந்திர ஹிட்டிராச்சி என்ற ராஜபக்சேவின் மருமகன் ஸ்கை டெலிகாம் நெட்வொர்க்கின் இயக்குனராகிறார். இலங்கையின் ஒட்டுமொத்த WiMax தொழில் நுட்பதிறன் சேவையின் பெரும் தொழில் அதிபராக மாறுகிறார். சரி இதில் எங்கிருந்து லைகா மொபைல் வருகிறது என்றால்.

plcdoc

ஹாஸ்டிங்க்ஸ் ட்ரேடிங்க் ஈ சர்விஸஸ் என்ற நிறுவனம் லைகாவின் ஒரு நிறுவனமே இந்த நிறுவனம் தான் லைகா மொபைல், லைகா ஃப்ளை, லைகா டெலிகாம், லைகா மொபைல் போன்ற 33 நிறுவனப் பெயர்களை தனது பெயரில் ரிஜிஸ்டர் செய்து வைத்திருக்கும் நிறுவனம். இதன் கீழாக தான் லைகா நிறுவனங்கள் அனைத்து தங்களது சேவையை தொடர்ந்து வருகின்றனர். ஜூலை 25ம் தேதி 2014 அன்று லைகா மூவிஸ் என்று புதிய பெயருக்கான பதிவையும் செய்துள்ளனர். அதில் உரிமையாளர் என்ற இடத்தில் ஹாஸ்டிங்க்ஸ் ட்ரேடிங்க் ஈ சர்விசஸ் நிறுவனத்தின் பெயரும் பதிவிட்ட முகவையாளராக Representative ஆக லைகா டெல் நிறுவனமும் உள்ளது. இது அத்தனைக்கும் பிறகு தான் எங்களுக்கும் ராஜபக்சேவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்கிறார்கள். காமன் வெல்த் மாநாடுக்கு டைட்டில் ஸ்பான்சராக இருந்ததில் இருந்து அனைத்தையும் செய்துவிட்டு இதையும் செய்கிறார்கள்.

lycamovies

rep by lyca

இங்கு இருக்கும் தமிழ் திரையுலகினருக்கு இது எல்லாம் தெரியுமா தெரியாதா என்று எல்லாம் என்னால் கேள்வி எழுப்ப முடியாது எனென்றால் அவர்கள் ஒன்றும் தெரியாத பாப்பாக்கள் இல்லை, வாயில் விரலை வைத்தால் கடிக்க தெரியாமல் இருப்பதற்கு..

மேலும் விவரங்களை அறிந்து கொள்ள..

 

Rajapakshe family tree

http://sri-lanka.theglobalmail.org/family

 

directors list

http://www.skynetwork.lk/about.html

 

president family

http://en.wikipedia.org/wiki/Rajapaksa_family

 

the conspiracy

http://sri-lanka.theglobalmail.org/brothers-grip

 

sunday leader editor

http://www.thesundayleader.lk/20080224/spotlight.htm

– ஹரிஹரன்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top