யு.பி.எஸ்.சி தேர்வு விவகாரத்தால் மாநிலங்களவையில் அமளி

parliamentசிவில் சர்வீசஸ் தேர்வு விவகாரத்தில் விரைவாக சுமுக தீர்வை எட்ட வலியுறுத்தி நாடாளுமன்ற மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

நாடாளுமன்ற மக்களவை தொடங்கிய உடன் புனே நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, கேள்வி நேரத்தின் போது, ஐக்கிய ஜனதா தளத்தின் சரத் யாதவ், ஏழு லட்சம் தேர்வர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இந்த பிரச்னையில் ஒரு வார காலத்தில் தீர்வு எட்டுப்படும் உறுதியளிக்கப்பட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினார். அதனால்தான் இந்த பிரச்னையில் உரிமை மீறல் நோட்டிஸ் வழங்கியதாகவும் அவர் கூறினார்.

இதனையடுத்து உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் கூடிய அவையில் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இது குறித்த அறிக்கையை அரசு படித்து வருவதாகவும், விரைவாக தீர்வை எட்ட விரும்புவதாகவும் தெரிவித்தார். பிரச்னைக்கு தீர்வு எட்ட அரசு குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top