காமன்வெல்த் விளையாட்டு போட்டி: ஆண்கள் ஆக்கியில் இந்தியா அரை இறுதிக்கு தகுதி!

hockeyகாமன்வெல்த் விளையாட்டில் ஆண்களுக்கான ஆக்கியில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய அணி கடைசி லீக்கில் தென்ஆப்பிரிக்காவுடன் நேற்று பலப்பரீட்சை நடத்தியது. வாழ்வா-சாவா? நிர்ப்பந்தத்துடன் களம் புகுந்த இந்திய அணி 5-2 என்ற கோல் கணக்கில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்து.

இந்திய தரப்பில் சுனில், ரமன்தீப்சிங், ரகுநாத், ருபிந்தர்சிங் (2 கோல்) கோல் அடித்தனர். இதன் மூலம் இந்திய அணி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் ‘ஏ’ பிரிவில் 2-வது இடத்தை பிடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது. இப்பிரிவில் ஆஸ்திரேலியா (4 வெற்றி) ஏற்கனவே அரைஇறுதிக்கு தகுதி பெற்று விட்டது.

தென்ஆப்பிரிக்கா 2 வெற்றி, 2 தோல்வியுடன் வெளியேறியது. அரைஇறுதியில் இந்தியா, ‘பி’ பிரிவில் முதலிடத்தை பிடித்த நியூசிலாந்துடன் நாளை பலப்பரீட்சை நடத்துகிறது. மற்றொரு அரைஇறுதியில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top