ஆகஸ்ட் இறுதியில் சிம்புவின் வாலு ரிலீஸ்!

Vaalu-releaseசிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் வாலு. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். விஜய் சந்தர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். மேலும் இப்படத்தில் சந்தானம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் நடிக்கும் போது சிம்புவுக்கும் ஹன்சிகாவிற்கும் காதல் ஏற்பட்டது. இதனை அதிகாரபூர்வமாக அறிவித்தனர். ஆனால் சில வாரங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. காதலை முறித்து விட்டதாக அறிவித்தனர்.

இதனால் வாலு படம் சிறிது காலம் முடிவடையாமல் நின்றது. படத்தில் நடிக்க ஹன்சிகா மறுத்து வந்ததாகவும், தயாரிப்பாளரிடம் சிறு பிரச்சனை என்றும் செய்திகள் வெளியாகின. அதன்பிறகு இந்தப் பிரச்சனைகள் எல்லாம் சுமுகமாக முடிந்து படப்பிடிப்பை தொடங்க ஆரம்பித்தனர்.

சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியிடப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பு பெற்றது. இப்படம் எப்போதுதான் வெளிவரும் என்று திரையுலகமும், ரசிகர்களும் எதிர்ப்பார்த்திருக்கும் வேளையில், இப்படத்தை ஆகஸ்ட் இறுதியில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

படம் ஆகஸ்டு மாதம் வெளியாவதால் தான் மகிழ்ச்சியாக இருப்பதாக ஹன்சிகா டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top