நளினி தொடர்ந்த வழக்கு: மத்திய உள்துறைச் செயலாளர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

naliniகுற்றவாளியை விடுவிக்க மத்திய அரசிடம் கருத்து கேட்கும்படி கூறும் 435(1ஏ) சட்டப்பிரிவை நீக்கக்கோரி நளினி தொடர்ந்த வழக்கில் மத்திய உள்துறைச் செயலாளர் பதிலளிக்கும்படி உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, ஸ்ரீபெரும்புதூரில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன் உள்பட பலர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்தவழக்கில் நளினிக்கு முதலில் தூக்குத்தண்டனையும் அதன்பின் அது ஆயுள் தண்டனையாகவும் மாற்றப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் ஆயுள்தண்டனை கைதிகள் நீண்ட காலம் சிறையில் இருப்பதாலும், வழக்கு தாமதம் ஏற்பட்டதாலும் அவர்களை அரசு விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒரு வழக்கில் தீர்ப்பு கூறினார்கள். இதன் அடிப்படையில் நளினி உள்பட பலபேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்தமனு மீதான விசாரணை சமீபத்தில் துவங்கியது.

இதற்கிடையே உச்சநீதிமன்றத்தில் நளினி ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் குற்றவாளியை விடுவிக்க மத்திய அரசிடம் கருத்து கேட்கும்படி கூறும் 435(1ஏ) சட்டப்பிரிவை நீக்க வேண்டும் எனவும். சி.பி.ஐ. வழக்குகளில் குற்றவாளிகளை விடுவிக்க மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் உள்ளது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், மத்திய உள்துறை செயலாளர் இதற்கு பதில் அளிக்குமாரு உத்தரவிட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top