டெல்லியில் ஆட்சியமைக்க தயார்: பாஜக அறிவிப்பு

sathees-delhiடெல்லியில் ஆட்சியமைக்க தயாராக இருப்பதாக அம்மாநில பாரதிய ஜனதா தலைவர் சதீஷ் உபாத்யாய் தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சதீஷ் உபாத்யாய் தலைமையிலான கட்சி நிர்வாகிகள் இன்று காலை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சதீஷ் உபாத்யாய், டெல்லியில் ஆட்சியமைக்கும் விவகாரத்தில், கட்சி எம்.எல்.ஏ.க்களின் கருத்துக்களை ராஜ்நாத்சிங்கிடம் விளக்கியதாக தெரிவித்தார்.

கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சதீஷ் உபாத்யாய், டெல்லியில் ஆட்சியமைக்க பாரதிய ஜனதா கட்சி தயாராக இருப்பதாகவும், ஆனால் ஆட்சியமைப்பதற்கான அழைப்பு எதுவும் துணை நிலை ஆளுநரிடமிருந்து வரவில்லை எனவும் தெரிவித்தார். அதேநேரத்தில், புதிதாக தேர்தலை சந்திக்கவும் தயாராக இருப்பதாக சதீஷ் உபாத்யாய் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top