கோப்பை இழந்ததை மறக்க முடியவில்லை: மெஸ்சி வருத்தம்

messiஉலக கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் ஜெர்மனியிடம் 1–0 என்ற கோல் கணக்கில் தோற்று அர்ஜென்டினா கோப்பை இழந்தது.

அர்ஜென்டினா கோப்பையை வெல்லும் என்று அந்நாட்டு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், அது நிறைவேறாததால் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில் கோப்பை இழந்ததை மறக்க முடிய வில்லை. எந்த ஆறுதலும் என்னை தேற்றவில்லை என்று அர்ஜென்டினா கேப்டனும், தங்க பந்து விருது வென்றவருமான லியோனல் மெஸ்சி கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:–

நான் பெற்ற பரிசு (தங்க பந்து) பற்றி நினைக்கவில்லை. எதையும் பற்றி சிந்திக்கும் நிலையில் இல்லை. விருதுகள் என்னை ஆறுதல் படுத்தாது. கோப்பையை இழந்ததை மறக்க முடியவில்லை.

அர்ஜென்டினா மக்களுக்காக கோப்பையை வெல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டேன். கோப்பையை வெல்ல நல்ல வாய்ப்புகள் இருந்தது. கோல் அடிக்க கிடைத்த 3 வாய்ப்புகள் தவற விட்டுவிட்டோம். இதனால் அதிக கோபம்தான் வருகிறது.

ஒவ்வொரு கால்பந்து வீரருக்கும் உலக கோப்பையை வெல்வது பெரிய விஷயம். சிறுவயது கனவு நனவாகும் மகிழ்ச்சியே ஆகும். அது என்றும் மனதில் இருந்து நீங்காது.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top