ரஷியாவில் மெட்ரோ ரயில் தடம் புரண்டதில் 3 பேர் பலி!

ரஷியா மெட்ரோ ரயில் விபத்துரஷியாவில் மெட்ரோ ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். 55க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் பயணிகளுடன் சுரங்கப் பாதையில் சென்று கொண்டிருந்த மெட்ரோ ரயில் செவ்வாய்க்கிழமை காலை தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இதில் 3 பேர் உயிரிழந்தனர் என்று ரஷிய சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விபத்து ரஷியாவில் கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற மெட்ரோ ரயில் விபத்துக்களில் மோசமான விபத்தாக கருதப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top