உலகக்கோப்பை கால்பந்து: ஜெர்மனி ரசிகர்கள் கொண்டாட்டம்

germany-trophy1உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி அணி சாம்பியன் பட்டம் வென்றதை அந்நாட்டு ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

பிரேசிலில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணியை ஜெர்மனி அணி 1-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இதனை போட்டி நடைபெற்ற ரியோ டி ஜெனிரோ நகரின் மரக்கானா மைதானத்தில் திரண்டிருந்த ஜெர்மனி ரசிகர்கள் ஆடிப்பாடி கொண்டாடினர்.

இதே போன்று ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் திரண்ட ரசிகர்களும் தங்களது மகிழ்ச்சியை ஆரவாரத்துடன் வெளிப்படுத்தினர். முக்கிய சாலைகளில் தேசியக் கொடிகளுடன் வாகனங்களில் வலம்வந்த ரசிகர்கள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். சில இடங்களில் இனிப்பு வழங்கியும், கேக் வெட்டியும் ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top