தமிழில் “டி டே” படத்திற்கு நோ சொன்ன ஸ்ருதிஹாசன்.

ஸ்ருதி ஹாசன்‘டி டே’ என்ற ஹிந்திப் படத்தை தமிழில் டப் செய்து திரையிட கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு நீதி மன்றத்தில் வழக்கு தொடர உள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன்.

கடந்த ஜூலை மாதம் ஹிந்தியில் ரிலீசான படம் ‘டி-டே’. இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன் ஒரு பாலியல் தொழிலாளியாக படுகவர்ச்சியாக நடித்திருந்தார்.இதனாலேயே இப்படம் மும்பை ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.இந்நிலையில் இப்படம் ‘தாவூத்’ என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டு ரிலீசாக உள்ளது.

இதற்கான விளம்பரங்கள் நேற்றைய நாளிதழ்களில் வெளிவந்தன. அதில் ஸ்ருதிஹாசன் ஹீரோ முதுகின் மேலே எந்த ஆடையும் அணியாமல் படுத்துக் கிடப்பது போன்ற போட்டோ ஒன்று இடம் பெற்றிருந்தது.
இதனை கண்டு ஆத்திரமடைந்த நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனது இமேஜ் கெட்டுவிடுமோ என்ற பயத்தில் இப்படத்தை தமிழில் ரிலீசாகமல் தடுக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.

இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் அவர் தெரிவிக்கையில், ஒப்பந்தத்தை மீறி தனது அனுமதி இன்றி ரிலீசாக உள்ள இப்படத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top