மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு!

mettur_damகர்நாடகத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தென்மேற்கு பருவ மழை பெய்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாதம் போதிய மழை பெய்யவில்லை.

தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் கடந்த 7 நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது.

இதன் காரணமாக காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. குடகு மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கால் காவிரி ஆறு உற்பத்தியாகும் தலைக்காவிரி – பாக மண்டலா இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கபினி அணை நிரம்ப வாய்ப்பு உள்ளது. அணை நிரம்பிய பிறகு உபரி நீர் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்படும். இதனால் இன்னும் சில நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கடந்த ஆண்டு கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரியில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணையும் நிரம்பி வழிந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 47.40 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 1210 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 800 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top