உலககோப்பை கால்பந்து: தங்க பந்து பட்டியலில் 10 பேர்!

neymarஉலக கோப்பை தொடரில் சிறந்த வீரராக தேர்வு செய்யப்படுவோருக்கு தங்க பந்து (கோல்டன் பால்) விருது வழங்கப்படுவது உண்டு. இந்த விருதை பறிக்கக்கூடிய பட்டியலில் மெஸ்சி, மரியா, மாஸ்செரனோ (மூவரும் அர்ஜென்டினா),

தாமஸ் முல்லர், பிலிப் லாம், டோனி குரூஸ், மேட்ஸ் ஹம்மல்ஸ் (4 பேரும் ஜெர்மனி), ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் (கொலம்பியா), நெய்மார் (பிரேசில்), அர்ஜென் ரோபன் (நெதர்லாந்து) ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

சிறந்த கோல் கீப்பருக்கான ‘தங்க குளோவ்ஸ்’ விருதுக்கான பட்டியலில் கீலோர் நவாஸ் (கோஸ்டாரிகா), மானுவல் நியூர் (ஜெர்மனி), செர்ஜியோ ரோமிரோ (அர்ஜென்டினா) ஆகியோரும், சிறந்த இளம் வீரர் விருதுக்கான பட்டியலில் மெம்பிஸ் (நெதர்லாந்து), பால் போக்பா, ராபால் வரானே (பிரான்ஸ்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களில் விருதை தட்டிச் செல்வது யார்? என்பது இறுதி ஆட்டத்திற்கு பிறகு தெரிய வரும்.

golden shoeஇதேபோன்று உலக கோப்பை கால்பந்து போட்டியில் அதிக கோல் அடிப்பவர்களுக்கு தங்க ஷூ (கோல்டன் பூட்) வழங்கப்பட்டு வருகிறது. இந்த போட்டிக்கான தங்க ஷூ–வை வெல்வது யார்? என்பதில் 6 கோல்கள் அடித்த கொலம்பியா வீரர் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ், 5 கோல்கள் அடித்த ஜெர்மனி வீரர் தாமஸ் முல்லர் ஆகியோர் இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது.

இறுதிப்போட்டியில் தாமஸ் முல்லர் ஒரு கோல் அடித்தால் 6 கோலை எட்டுவார். அப்போது இருவருக்கும் இடையேயான கோல் எண்ணிக்கை சமநிலையை எட்டும். இருவர் இடையே சம நிலை ஏற்படும் போது கோல் அடிக்க யார் அதிகம் உதவி இருக்கிறார் என்பது கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.

அப்படி பார்த்தால் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் 2 முறை கோல் அடிக்க உதவி இருக்கிறார். தாமஸ் முல்லர் 3 தடவை கோல் அடிக்க உதவி புரிந்துள்ளார். கோல் சமநிலை ஏற்பட்டால் தாமஸ் முல்லருக்கு தான் தங்க ஷூ கிடைக்கும்.

இறுதிப்போட்டியில் தாமஸ் முல்லர் கோல் அடிக்காவிட்டால், ரோட்ரிக்ஸ் தங்க ஷூவை தன்வசப்படுத்தி விடுவார். அர்ஜென்டினா அணி வீரர் லயோனல் மெஸ்சி 3 கோல்கள் அடித்தால் மட்டுமே தங்க ஷூவை பற்றி நினைக்க முடியும்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

One comment

Your email address will not be published.

Scroll To Top