முருகன், சாந்தன், பேரறிவாளன் மீதான மறு சீராய்வு மனு: மனுதாரர் தரப்பு வாதம் இன்று முடிவடைவு.

பேரறிவாளன்முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட மறு சீராய்வு மனுவின் மனுதாரர் தரப்பு வாதம் உச்சநீதிமன்றத்தில் இன்று நிறைவுபெற்றது.

முருகன் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானியும் மற்ற 2 பேர் சார்பில் யுக்முக் சவுத்ரியும் வாதாடினர். மரண தண்டனை அளிக்கப்பட்ட பின் 16 ஆண்டுகள் இவர்கள் சிறையில் இருந்துள்ளதாக மனுதாரர் தரப்பு வாதத்தை முன் வைத்தது. மனுதாரர் தரப்பு வாதம் முடிவடைந்துள்ள நிலையில், இந்த சீராய்வு மனு மீதான அரசு தரப்பு வாதம் பிப்ரவரி 4-ல் நடைபெறவுள்ளது.

தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மத்திய அரசின் வழக்கறிஞர், அரசு தரப்பு வாதங்களை முன்வைக்க கால அவகாசம் கேட்டார். இதை நீதிபதிகள் நிராகரித்தனர்.

அண்மையில் கருணை மனு மீதான முடிவு எடுப்பதில் கால தாமதம் செய்ததால் வீரப்பன் கூட்டாளிகள் எனக் கூறப்பட்ட நால்வர் உள்பட 15 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரும் தங்களது தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதனிடையே கருணை மனு மீதான தாமதத்தை காரணம் காட்டி மரண தண்டனையை ரத்து செய்யும் தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top