உலக கோப்பை கால்பந்து: மூன்றாவது இடத்தை கைப்பற்றும் முனைப்பில் பிரேசில்-நெதர்லாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை!

fifaஉலக கோப்பை கால்பந்து போட்டியில் 3–வது இடத்துக்கான ஆட்டம் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி 1.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பிரேசில்-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் 11 முறை மோதியுள்ளன. இதில் தலா 3 முறை பிரேசில், நெதர்லாந்து அணிகள் வெற்றி பெற்றன. 5 ஆட்டம் ‘டிரா’ ஆனது. இரு அணிகளும் தலா 15 கோல்கள் அடித்து உள்ளன.

இதனால் நெதர்லாந்து அணியை வீழ்த்தி பிரேசிலால் 3–வது இடத்தை பிடிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரேசில் அணி அரை இறுதியில் 1–7 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியிடம் மிகவும் மோசமாக தோற்றது.

மனரீதியாக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் பிரேசில் அணியை வீழ்த்த நெதர்லாந்து அணி முயற்சிக்கும். இரு அணியிலும் தலைசிறந்த வீரர்கள் இருப்பதால் வெற்றிக்கு கடுமையாக போராடுவார்கள்.

பிரேசில் அணி இதுவரை 2 முறை 3–வது இடத்தை பிடித்து இருக்கிறது. 1938–ல் அந்த அணி 4–2 என்ற கோல்கணக்கில் சுவிடனையும், 1978–ல் 2–1 என்ற கோல் கணக்கில் இத்தாலியையும் தோற்கடித்து 3–வது இடத்தை பிடித்தது.

நெதர்லாந்து அணி இதுவரை 3–வது இடத்தை பிடித்தது இல்லை. 1998–ல் குரோஷியாவிடம் 1–2 என்ற கோல்கணக்கில் தோற்றதால் 4–வது இடத்தை பிடித்தது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top