உலககோப்பை கால்பந்து தொடர்: ஜூலை 13 இறுதிப்போட்டியில் ஜெர்மனி-அர்ஜென்டினா அணிகள் மோதல்!

Argentina+v+Germany+2010+FIFA+World+Cup+Quarter+qZeiFCVNd3Qlஉலக கோப்பை கால்பந்தில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி வருகிற 13-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு ரியோடிஜெனீரோவில் உள்ள மரகானா ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில் முன்னாள் சாம்பியன்கள் ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த ஜெர்மனியும்-தென் அமெரிக்க கண்டத்துதேசமான அர்ஜென்டினாவும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் சந்திக்க இருப்பது இது 3-வது முறையாகும். 1986-ம் ஆண்டு இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா 3-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தியது. 1990-ம் ஆண்டு இறுதிசுற்றில் ஜெர்மனி அணி 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை பழிதீர்த்தது. இந்த உலக கோப்பையை ஜெர்மனி அணி வென்றால், தென்அமெரிக்க கண்டத்தில் நடந்த போட்டியில் உலக கோப்பையை வென்ற முதல் ஐரோப்பிய அணி என்ற சாதனையை படைக்கும்.

அர்ஜென்டினா அணியின் முன்னணி வீரர் ஹோன்சலோ ஹூகுவைன் கூறும் போது ‘ஜெர்மனி அணியை கண்டு எங்களுக்கு எந்தவித பயமும் கிடையாது. ஜெர்மனி அணியை நாங்கள் மதிக்கிறோம். அர்ஜென்டினா அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இருப்பதால் அவர்கள் கவலை அடைந்து இருப்பார்கள்’ என்றார்.

நெதர்லாந்துக்கு எதிரான அரை இறுதிஆட்டம் ‘யுத்தம்’ போன்று இருந்ததாக கூறியுள்ள அர்ஜென்டினா பயிற்சியாளர் அலெசான்ட்ரோ சபெல்லா ‘இறுதிப்போட்டிக்கு தயாராக எங்களுக்கு ஒருநாள் மட்டுமே இருக்கிறது.

ஜெர்மனி அணியோடு ஒப்பிடுகையில் எங்களுக்கு ஓய்வு மிகவும் குறைவு தான். அவர்கள் நல்ல ஓய்வுக்கு பிறகு இறுதிப்போட்டிக்கு திரும்புவது அனுகூலமாகும். ஜெர்மனி அணியை தோற்கடிப்பது எப்பொழுதுமே கடினமான விஷயம்’ என்றார்.

இறுதி ஆட்டம் குறித்து ஜெர்மனியின் முன்னணி வீரர் குளோஸ் கூறியதாவது:–

பிரேசிலுக்கு எதிராக அரைஇறுதி போட்டியை மிகவும் ரசித்து விளையாடினோம். அதில் அபார வெற்றி பெற்றோம். ஆனால் அதையே நினைத்து கொண்டிருக்கவில்லை. 24 மணி நேரத்தில் மறந்து விட்டோம்.

தற்போது அர்ஜென்டினாவுக்கு எதிராக இறுதிப்போட்டி மீதே முழு கவனம் செலுத்தி வருகிறோம். அதில் எங்களது திறன்களை காட்ட வேண்டியது அவசியம். உலக கோப்பையில் அதிக கோல் அடித்து ரொனால்டோ சாதனையை முறியடித்த பெருமையாக உள்ளது. இருந்தபோதிலும் அதைபற்றி நினைக்க நேரம் அல்ல.

ஜெர்மனி சாம்பியன் பட்டம் வெல்லும் என்று கூறுகிறார்கள். ஆனால் அர்ஜென்டினா அணி சவாலானது. அவர்களுக்கு எதிராக கடுமையாக போராட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top