செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு!

ssசெல்வராகவன் இயக்கும் அடுத்த படத்தில் சிம்பு நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘இரண்டாம் உலகம்’ திரைப்படம் தோல்வியடைந்த போதிலும், இயக்குனர் செல்வராகவன் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் மும்முரமாக செயல்பட்டு வருகிறார்.இவர் அடுத்து இயக்கும் படத்தை ’ரேடியன்ஸ் மீடியா’ நிறுவனம் சார்பில் வருண் மணியன் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்கிறார்.

செல்வராகவன்– சிம்பு முதன் முதலாக இணையும் இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கவிருக்கிறது.விக்ரமை வைத்து இயக்குவதற்காக செல்வராகவன் ’சிந்துபாத்’ என்ற கதையை ஏற்கெனவே உருவாக்கி வைத்திருந்தார்.அந்த கதையை தான் இப்போது சிம்புவை வைத்து இயக்கவிருக்கிறார் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top