ஹெலிகாப்டர் ஊழல்: ஆந்திர கவர்னரிடம் சி.பி.ஐ. விசாரணை

419877f2-6f30-48e1-91bd-31024dfec920_S_secvpfவி.வி.ஐ.பிக்களுக்கு ஹெலிகாப்டர்கள் வாங்கியபோது ஊழல் நடந்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் மேற்கு வங்க கவர்னராக இருந்த எம்.கே. நாராயணன் சாட்சியமாக சேர்க்கப்பட்டு அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து நாராயணன் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் ஆந்திர மாநில ஆளுநர் நரசிம்மனிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை நரசிம்மனிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.

ஹெலிகாப்டர் ஒப்பந்தம் நடைபெற்ற 2005-ம் ஆண்டு நரசிம்மன் உளவுத்துறை தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியதால் இவரும் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top