ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டிகள் பிப்ரவரி 3-ம் தேதி சென்னையில் துவக்கம்.

Somdev Devvarman Wiki  Somdev Devvarman Pics 3தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் சார்பில் டென்னிஸ் சங்க முன்னாள் செயலாளர் பி.எல்.ரெட்டி நினைவாக நடத்தப்படும் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டிகள் பிப்ரவரி 3-ம் ஆரம்பமாக உள்ளது.
தொடர்ந்து ஆறு நாட்கள் நடைபெற உள்ள இப்போட்டிகளில் இந்திய முன்னணி வீரர்கள் சோம்தேவ், யுகி பாம்ப்ரி உட்பட பலர் பங்கேற்கின்றனர்.சென்னை நுங்கம்பாக்கம் எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் பிப்ரவரி 3-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை இப்போட்டிகள் நடக்கவுள்ளன.  இதற்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் பிப். 1 மற்றும் 2ம் தேதி நடக்கிறது.
இந்தியா, ரஷியா, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட 15 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர்.
இத்தகவலை தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவர் பழனியப்பன் சென்னையில் நேற்று அறிவித்தார்.
ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி 18 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது சென்னையில் நடைபெறுகிறது. கடைசியாக 1996-ம் ஆண்டு சென்னையில் ஏடிபி சேலஞ்சர் போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top