பந்து வீச்சாளர்கள் முழுத்திறமையையும் வெளிப்படுத்த வேண்டும் : இந்தியா அணி கேப்டன் தோனி அறிவுரை

MS-Dhoni-001ஹேமில்டனில் நேற்று நடந்த 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, தொடரையும்  3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது  நியூசிலாந்து அணி.

நேற்றைய போட்டி முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த தோனி, பந்து வீச்சாளர்கள் மீது கடும் அதிருப்தியை தெரிவித்தார்.மேலும் அவர் கூறுகையில்,நமது பந்துவீச்சாளர்கள் திறமைசாலிகள்தான். ஆனால் மோசமான பந்துவீச்சின் காரணமாகவே இத்தொடரை இழந்துள்ளோம்.

இத்தொடரில் சமி மட்டுமே சரியான முறையில் பந்துவீசி வருகிறார். இத்தொடரில் புவனேஷ்குமார் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றாவிட்டாலும் அவர் சிறந்த பந்துவீச்சாளரே.எனவே வரும் ஆட்டங்களில் பந்து வீச்சாளர்கள் தங்களது முழுத்திறமையையும் வெளிப்படுத்தி சிறப்பாக செயல்பட வேண்டும்.

அதே போல கடைசி நேரத்தில் ரன்களை வாரி வழங்குவதை பந்து வீச்சாளர்கள் நிறுத்த வேண்டும். புதுப்பந்தைக் கையாளும் போது கவனமாக இருப்பது அவசியம் என்றும் தோனி கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top