தமிழை மத்திய அரசின் அலுவல் மொழியாக்கக் கோரி பொதுநல மனு தாக்கல்!

உயர்நீதிமன்ற மதுரை கிளைதமிழ் உள்ளிட்ட 22 மொழிகளை மத்திய அரசின் அலுவல் மொழியாக உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

திருப்பாலையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜமாணிக்கம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், இந்திய அரசியலமைப்பு சட்டம் 8-வது அட்டவணையில் தமிழ், மராத்தி உள்பட 22 மொழிகள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், தற்போது வரை ஆங்கிலமும் இந்தியுமே அலுவல் மொழியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளையுமே அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என மனுவில் அவர் வலியுறுத்தியிருந்தார். நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் மகாதேவன் முன்னிலையில் மனு மீதான விசாரணை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 4 வார காலத்திற்குள் மத்திய கேபினட் செயலர் மற்றும் தமிழக தலைமைச் செயலர் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top